AUTOMOBILE NEWS


                                 


1. டோயோட்டோ நிறுவனம் 2015 ஆம் ஆண்டிற்க்குள் 18 புதிய ஹைபிரிட் மாடல்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் தற்பொழுது இரண்டு மாடல்களை மட்டுமே விற்பனை செய்கின்றது. அதாவது பிர்யூஸ் கார் மட்டுமே.

2. லம்போர்கினி நிறுவனத்தின் பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு அவான்டேட்டர் எல்பி 720-4 சிறப்பு எடிசனை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த சிறப்பு எடிசனில் 100 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளது.

3. நிசான் இந்தியா நிறுவனத்திற்க்கு புதிய எம்டி மற்றும் சிஇஒ வை நியமித்துள்ளது.

4. டாடா நானோ டீசல் அடுத்த ஆண்டு வெளிவரவுள்ளது. இந்த நிலையில் நானோ டீசல் இன்ஜின் விவரங்கள் வெளிவந்துள்ளது. 800 சிசி டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் ட்ர்போ சார்ஜர் பொருத்தபட்ட எஞ்சினாக விளங்கும்.

5.  ராஞ்சியில் பெண்களே பெண்களுக்கான ஆட்டோவினை இயக்க தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக 200 பெண் ஆட்டோ டிரைவர்களை  கொண்டு இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோக்களில் ஜிபிஎஸ் மற்றும் அவசர கால பொத்தான்களை பொருத்தியுள்ளனர். ஆனால் பெண் டிரைவர்களுக்கு பற்றாக்குறை இருப்பதனால் சிறப்பு அனுமதி தந்து ஆண் டிரைவர்களை நியமிக்க உள்ளனர். இவர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்கானிக்கப்படும்



source: www.tamil.drivespark.com

0 comments: