பிஎம்டபிள்யூ கார்களிலும் எமிசன் பிரச்னையா?

டீசல் கார்களில் எமிசன் மோசடி செய்த விவகாரத்தில் சிக்கி தவிக்கிறது ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம். இந்த நிலையில், பிஎம்டபிள்யூவின் சில டீசல் கார்களிலும் எமிசன் பிரச்னை இருப்பதாக ஜெர்மனியிலிருந்து வெளிவரும் ஆட்டோபைல்டு வாராந்திர இதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது
                                                 

சர்வதேச பசுமை போக்குவரத்து முகமை நடத்திய சாலை சோதனையில், பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவியின் 2.0d டீசல் மாடலில் எமிசன் பிரச்னை இருப்பதாக புகார் கூறப்பட்டிருக்கிறது.   ஐரோப்பிய விதிமுறைகளின்படி, நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 11 மடங்கு அதிகமான அளவு சுற்றுச்சூழலுக்கு தீங்கு தரும் புகையை வெளியிடுவதாக அந்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளதாக ஆட்டோபைல்டு இதழ் செய்தி தெரிவிக்கிறது. ஆனால், இந்த புகாருக்கு பிஎம்டபிள்யூ நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதுபோன்ற எந்த மோசடியான சாஃப்ட்வேரையும் நாங்கள் பயன்படுத்தவில்லை என்று பிஎம்டபிள்யூ அடித்து கூறியிருக்கிறது. எமிசன் பிரச்னையில் ஜெர்மனியை சேர்ந்த பாரம்பரியம் மிக்க கார் நிறுவனங்களின் பெயர்கள் தொடர்ந்து அடிபட்டு வருவது அந்நாட்டு தயாரிப்புகள் மீதான நம்பகத்தன்மையை குறைப்பதான சூழலை ஏற்படுத்தி வருகிறது.

0 comments: