வெளியூர் செல்லும்போதும், அலுவலக விஷயமாக அலையும்போதும் ஆட்டோரிக்ஷா, டாக்சி இல்லையென்றால் பஸ் பிடித்து செல்ல வேண்டியிருக்கிறது. அவ்வாறு அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்கள் தனியாக செல்லும்போது இந்த டாக்சி, பஸ், ஆட்டோ ரிக்ஷாக்களுக்கா செலவிடும் தொகை, அலைச்சல், நேரம் உள்ளிட்டவை எரிச்சலை ஏற்படுத்தும். அவ்வாறு இல்லாமல், உங்களது சொந்த ஸ்கூட்டரை கையிலேயே எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வசதி இருந்தால் சந்தோஷம்தானே.
அவ்வாறு நினைப்பவர்களின் எதிர்பார்ப்புகளை கச்சிதமாக பூர்த்தி செய்யும் விதத்தில் ஓர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கியுள்ளனர். மோவியோ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எங்கு வேண்டுமானாலும் மடக்கி வைத்து எளிதாக எடுத்துச் செல்ல முடியும்.
source: http://tamil.drivespark.com
0 comments: