செப்.1ல் புதிய ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் வெஸ்பா!


                                                                                  
    



  • வரும் 1ந் தேதி புதிய ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய ஆயத்தமாகி வருகிறது வெஸ்பா நிறுவனம்.


  •  இத்தாலியை சேர்ந்த பியாஜியோ நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் வெஸ்பா நிறுவனம், இந்தியாவில் பிரிமியம் ரக ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. 


  •   இந்த நிலையில், தனது மார்க்கெட்டை பலப்படுத்திக் கொள்ளும் விதத்தில், புதிய ஸ்கூட்டர் மாடல்களை களமிறக்குகிறது.


  •  வரும் 1ந் தேதி நடைபெற இருக்கும் இதற்கான நிகழ்ச்சியில், வெஸ்பா நிறுவனத்தின் விளம்பர தூதரும், இத்தாலியின் பிரபல கால் பந்தாட்ட வீரருமான அலெசான்ட்ரோ டெல் பியரோவும் பங்கேற்க இருக்கிறார்.


  •   புதிய ஸ்கூட்டர் மாடல்களில் 125சிசி எஞ்சினும், சிவிடி கியர்பாக்ஸும் இருக்கும். அத்துடன், டிஜிட்டல் மீட்டர் கன்சோல் பொருத்தப்பட்டிருப்பதோடு, டிஸ்க் பிரேக் ஆப்ஷனுடன் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

0 comments: