லிட்டருக்கு 100 கிலோ மீட்டர் தரும் வோல்க்ஸ் வேகன் - XL 1



    உலகிலேயே மிக அதிக மைலேஜ் தரும் இந்த கார் முதன் முதலில் 2011 ஆம் ஆண்டு கட்டர் மோட்டார் கண் காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

                                                      2014 Volkswagen XL1

இந்த மாடல் முதல் கட்டமாக  வெறும் 200 கார்களை மட்டும் தயாரிக்கும் என தெரிவிக்கப்பட்டது. அந்த 200 கார்களின் முன்பதிவும் முடிந்துவிட்டது  என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கார் ஒரு ஹைப்ரிட் கார் ஆகும் மேலும் இந்த காரில் இருவர் மட்டுமே அமர முடியும்.
                                                     

இந்த காரில் 800CC கொள்ளளவு கொண்ட 2 சிலிண்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 48 bhp திறனை தரும் மேலும் இந்த மாடலில் 27  bhp திறனை வழங்கும் எலெக்ட்ரிக் மோட்டரும் பொருத்தப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த மாடல் 75 bhp திறனை தரும். இந்த மாடல் 795 கிலோ கிராம் எடை கொண்டது.
                                                        

இந்த மாடலில் 7 ஸ்பீட் கொண்ட ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. அதிக மைலேஜ் தர வேண்டும்  என்பதற்காக  இதன் வெளிப்புற ஏரோ டைனமிகில் அதிக கவனம் செலுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்த மாடல் 3970 மில்லி மீட்டர் நீளமும்  1682 மில்லி மீட்டர் அகலமும் மற்றும் 1184 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது.

அனால் இந்த மாடல் 4 பேர் இருக்கை கொண்ட மாடல் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 comments: