Green Electric Cars......
- பெட்ரோல், டீசலில் இயங்கும் கார்களை விட்டால் வேறு கதியே இல்லையா, சுற்றுச்சூழல் பிரச்னை தலைவிரித்தாடுகிறது என்று தலையை பிய்த்துக் கொண்டதன் விளைவாக கிடைக்கப்பெற்றிருக்கும் தொழில்நுட்பம்தான் பேட்டரியில் இயங்கும் மின்சார கார்கள்.
- மின்சார கார்களுக்கான வரவேற்பு மெல்ல அதிகரித்து வரும் இவ்வேளையில், உலகின் பல்வேறு நாடுகள் மின்சார கார்களின் தயாரிப்புக்கு முன்னுரிமையையும், ஊக்குவிப்பையும் அளிக்கத் துவங்கியிருக்கின்றன.
- உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் கார் மார்க்கெட்டான இந்தியாவில் இந்த மின்சார கார்களுக்கான வரவேற்பு மிக குறைவு. இருக்கும் ஒரே காரான மஹிந்திரா ரேவா தயாரிப்பும் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. அதற்கு பல காரணங்களை அடுக்க முடியும். உதாரணமாக, இப்போது புதிய கார் ஒன்றை வாங்க நான் திட்டமிடுகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
- நகர்ப்புறத்தில் எளிதாக ஓட்டக்கூடிய வகையில் இருக்க வேண்டும். நீண்ட தூரம் செல்வதற்கும், குறைந்தது 5 பேர் செல்வதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்பது நான் மட்டுமல்ல, எல்லோருடைய பொதுவான எதிர்பார்ப்பாக இருக்கும். அடுத்து கவுரவம். பல லட்சங்களை செலவு செய்து கார் வாங்கும்போது, நம் கவுரவத்தை உயர்த்தும் பிராண்டு அல்லது டிசைனில் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுவது இயல்பு.
- ஆனால், இப்போது நம் நாட்டு மார்க்கெட்டில் இருக்கும் ஒரே மாடல் மஹிந்திரா இ2ஓ. இந்த மின்சார காரின் டிசைன் பரவாயில்லை என்றாலும், நீண்ட தூர பிரயாணங்களுக்கு ஏற்றதில்லை, விலை அதிகம் போன்றவை இந்த காருக்கு வரவேற்பை பெற்றுத்தரவில்லை.
- அதேநேரத்தில், இதையே மாற்று கோணத்தில் யோசித்தால் மின்சார கார்களுக்கான வரவேற்பை இந்தியாவிலும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
0 comments: