கடந்த சில நாட்களாக இந்திய நிறுவனங்கள் 2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு
முடிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.இந்நிலையில் இரு சக்கர வாகன உற்பத்தியில் முன்னணி
நிறுவனமான டிவிஎஸ் மோட்டார்ஸ் ஜூன் 30 வரை முடிந்த காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.இதில்
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் லாபம் 25% உயர்ந்து 90.27 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் லாப அளவு 72.32 கோடி ரூபாயாக உள்ளது.மேலும்
2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனத்தின் விற்பனை அளவு கணிசமாக உயர்ந்துள்ளதால்,
நிறுவனத்தின் லாப அளவு குறிப்பிடத்தகும் அளவில் உயர்ந்துள்ளது.இக்காலக்கட்டத்தில் இந்நிறுவனத்தின்
விற்பனை அளவு சுமார் 2,590 கோடி ரூபாயாக உள்ளது.
0 comments: