இந்தியாவின் முன்னணி பயணிகள் கார் விற்பனை நிறுவனமான
மாருதிசுசூகி நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 1,06,083 கார்களை விற்பனை செய்துள்ளது.வங்கிகளின்
தொடர் வட்டி குறைப்பு மற்றும் ஆட்டோமொபைல் உற்பத்தி மீதான வரிச் சலுகைகள் ஆகியவை இந்தியாவில்
கார் மற்றும் இரு சக்கர வாகன விற்பனையை அதிகரித்துள்ளது.கடந்த வருடம் இதே காலகட்டத்தில்
இந்நிறுவனம் 99,290 கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிறுவனத்தின்
ஷிப்ட், ரிட்ஸ் மற்றும் செலரியோ கார்களின் அதிகளவிலான விற்பனையின் மூலம் இந்நிறுவனம்
1 லட்சம் கார் விற்பனையைஅடைந்துள்ளது. கடந்த வருடத்தை ஒப்பிடும்போது இந்த 3 கார்களின்
விற்பனை சுமார் 3.5 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.மாருதி சுசூகி நிறுவனத்தின் சிறிய வகைக்
கார்களான ஆல்டோ மற்றம் வேகன்ஆர் கார்களின் விற்பனை கணிசமான அளவில் மட்டும் உயர்ந்துள்ளது.
செப்டம்பர் மாத்தில் இந்நிறுவனம் 35,570 கார்களை விற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.மேலும்
இந்நிறுவனத்தின் விற்பனையை அதிகப் புதிய மாடல்கள் பலவற்றை 2016ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த
உள்ளதாக மாருதி சுசூகி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
0 comments: